எனது வீட்டின் பின்புறம் ஒருநாள் இரவு சென்ற பொழுது சமையலறை பக்கத்தில் இந்த மரத்தவளை சுவரில் இருந்தது. சுவரில் ஒரு 7 அடிக்கு மேல் இருந்தது.
பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. அப்போது இதன் பெயர் எனக்கு தெரியவில்லை. இணையத்தில் தேடியபொழுது தமிழ் சரியான விளக்கம் இல்லை.
ஆங்கிலத்தில் இது (Common Indian Tree Frog ) என இருந்தது.
தமிழில் இது சரியான பெயரா தெரியவில்லை.
இதை எங்கள் ஊரான மார்த்தாண்டத்தில் தேரை என சொல்வார்கள். பிறந்த குழந்தைகளுக்கு தேரை குற்றம் என சொல்வார்கள். அது இருந்தால் இதை போட்டு எண்ணெய் காய்ச்சி அதை பக்குவப்படுத்தி குழந்தையின் உடலில் பூசுவார்கள். தேரை குற்றம் என்னும் குறை உள்ள குழந்தைகள் மிகவும் மெலிந்து ஒல்லியாக இருப்பார்கள்.
நான் இந்த தவளையை புகைப்படம் எடுத்தது சென்னையில் நான் தங்கியிருக்கும் வீட்டின் பின்புறம் . எனக்கு மிகவும் பிடித்த ஒரு தவளை. கடைசியாக படத்தில் இருக்கும் தவளை ஒரு pvc பைப்பினுள் இருக்கிறது.
No comments:
Post a Comment